(எம்.மனோசித்ரா)

இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே தலைமையிலான இராணுவ உயர் தூதுக்குழுவிற்கும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவிற்குமிடையில் இன்று புதன்கிழமை விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கை குறித்து சினேகபூர்வ கலந்துரையாடல் இதன் போது இடம்பெற்றது.

பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய இராணுவ பிரதானி ஆகியோரின் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.