நியூயோர்க் Sheraton New York Times Square ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற கிளின்டன் பூகோள அமையத்தின் 2016 வருடாந்த மாநாட்டின் விசேட அழைப்பாளராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டார். 

'சமநிலையைக் கடந்து நிலையான அபிவிருத்திக்காக பெண்களுடைய வலுவைப் பாதுகாத்தல்' என்பதை இவ்வருடத்தின் பிரதான தொனிப்பொருளாக கிளின்டன் பூகோள அமையம் கொண்டுள்ளது. 12 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். 

கிளின்டன் மன்றத்தின் உப தலைவர் செல்ஸியா கிளின்டன் இக்கூட்டத்தின் ஆரம்ப உரையினை நிகழ்த்தினார். 

உலகலாவிய ஒற்றுமையினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை வழங்கிவரும் பங்களிப்புக்கு இம்மாநாட்டின்போது பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இத்தாலிய பிரதமர் Matteo RENZI மற்றும் சுவீடனின் பிரதமர் Stefan Löfven உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.