(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன்று புதன்கிழமை மாலை 6 மணி வரை 513 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 528 248 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 490 800 பேர் குணமடைந்துள்ளனர். 23 602  பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றையதினம் பதிவாகிய 31 மரணங்களுடன் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 13 408 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இன்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 20 ஆண்களும் 11 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 23 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.