இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவான் குலசேகர பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகர கடவத்தை பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.

கொழும்பு - கண்டி ஏ - 1 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கடவத்தை - கிரிந்திவல - ரன்முத்துகல பகுதியில் நேற்று பிற்பகல் 3.25 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி குலசேகர பயணித்த காரிலேயே குறித்த மோட்டார் சைக்கிள் இவ்வாறு மோதியுள்ளது.  விபத்தின் பின்னர் வாகனத்தை குலசேகர முன்னோக்கி செலுத்தியுள்ளதாகவும் இதன்போது கார்களின் சில்லுகளுக்குள் குறித்த இளைஞன் அகப்பட்டு படுகயமடைந்துள்ளமையும் அதன்பின்னர் ராகம போதனா வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் அவர் உயிரிழந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாகன விபத்தூடாக ஒருவரின் உயிரைப் பறித்தமை தொடர்பிலேயே நுவன் குலசேகர கடவத்தை பொலிஸ் நிலையத்தின் போக்கு வரத்து பிரிவினரால் கைது  செய்யப்ப்ட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதை தொடர்ந்து பிணையில் விடுதலையாகியுள்ளார்.