(இராஜதுரை ஹஷான்)

மக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய நாட்டை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்வதுடன், இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பையும் சீர்செய்வோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பது தற்காலிக பிரச்சினை இதனை கொண்டு அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. 

Articles Tagged Under: ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ | Virakesari.lk

இடம்பெறவுள்ள தேர்தல்களின் அரசாங்கம் அமோக வெற்றிப் பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.என நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பலாபத்வல பகுதியில்  இன்று இடம்பெற்ற வீதி அபிவிருத்தி நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

நல்லாட்சி அரசாங்கத்தில் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை.நிர்மாணிக்கப்பட்ட வீதிகளை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

இந்த வீதியை அபிவிருத்தி செய்ய நெடுஞ்சாலை அமைச்சு 3500ஆயிரம் இலட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது. நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவில்லை என பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்றதை தொடர்ந்து பல சவால்களை எதிர்க் கொண்டுள்ளோம்.

 நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடியினால் தேசிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.மத்திய வங்கி கொள்ளையடிக்கப்பட்டது.கண்டி பகுதியில், தம்புள்ளை பகுதியிலும் நெடுஞ்சாலை வீதியை அபிவிருத்தி செய்வதாக குறிப்பிட்டார்கள்.ஆனால் அபிவிருத்தி செய்யப்படவில்லை.

 மக்கள் எதிர்பார்த்த வகையில் நாட்டை அபிவிருத்தி செய்வோம்.தற்காலிக பிரச்சினைகள் தற்போது தோற்றம் பெற்றுள்ளன.பால்மா,சமையல் எரிவாயு, ஆகியவற்றின் விலையேற்றம் நெல்லுக்கான உத்தரவாத விலை,ஆகியவை தற்காலிக பிரச்சினையாகும்.கொவிட் தாக்கத்தினால் இப்பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.இதனை ஒரு சில வர்த்தக மாபியாக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

மழையில் நனையும் போது மக்கள் அறிவார்கள் இவர்கள் மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் என்று நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்ய ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். புhதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை இரண்டு மாத காலத்திற்குள் சீர் செய்வோம்.அத்துடன் இடம்பெறவுள்ள தேர்தல்களிலும் அமோக வெற்றிப் பெறுவோம்.என்றார்.

'சுபீட்சமான எதிர்காலம்'  கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய 1இலட்சம் கிலோ மீட்டர் வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் பலாபத்வல- கலேவெல (பி-346) வீதியை விரிவுப்படுத்தும் அபிவிருத்தி பணிகள் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பிரனாந்துவின் தலைமைத்துவத்தில் ஆரம்பமானது.

விரிவுப்படுத்தப்படவுள்ள பலாபத்வல- கலேவெல(பி-346) வீதியின் 30.75 கிலோ மீட்டர் அபிவிருத்திக்காக 3,552 மில்லியன் நிதி செலவிடப்பட்வுள்ளது.இவ்வபிவிருத்தி பணிகளை 12 மாத காலத்திற்குள் நிறைவு செய்ய தீரமானிக்கப்பட்டுள்ளது.