இடிதாங்கி விற்பனை மோசடி கைதுசெய்யப்பட்ட 9 பேருக்கும் விளக்கமறியல்

Published By: Gayathri

13 Oct, 2021 | 07:25 PM
image

இலங்கையிலிருந்து உக்ரைன் நாட்டுக்கு இடிதாங்கிகளை விற்பனை செய்து,  ஒருவருக்கு தலா நூறு கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருகோடியே 33 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த ஒன்பது பேர் அடங்கிய குழுவினரை இம்மாதம் (25) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதவான் டி.ஜீ பிரதீப ஜயசிங்க உத்தரவு பிறப்பித்தார்.

நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் உடுகமசூரியவுக்கு கிடைத்த தகவலுக்கமைய  ஐ.பி.அபேசிங்க மற்றும் ஐ.பி.ஹெட்டியாராச்சி தலைமையில் நியமிக்கப்பட்ட பொலிஸார் குறித்த ஒன்பது சந்தேகநபர்களையும் நுவரெலியாவில் உல்லாச விடுதி, பஸ்தரிப்பு நிலையம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் வைத்து கடந்த 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துள்ளார்கள்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஒன்பது சந்தேகநபர்களையும் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் திங்கட்கிழமை மாலை நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் டி.ஜீ பிரதீப ஜயசிங்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்ட நீதவான் சந்தேகநபர்களை எதிர்வரும் (25) திகதி திங்கட்கிழமை வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில்  வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கை ஞாயிற்றுகிழமை (10) மாலை முதல் இடம்பெற்றதாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி.யு.உடுகமசூரிய (11) அன்று ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் நேற்று முன் தினம் (11) மாலை சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33