சிறப்பான பாதையை நோக்கி பயணித்த இலங்கையின் பொருளாதாரம் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. எனவே திறந்த பொருளாதார கொள்கையை கொண்டு எம்மை முந்தி சென்ற வியட்நாம் ,சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின்   தரத்திற்கு தேசிய அரசாங்கத்தின் ஊடாக இலங்கையை கொண்டு வருவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதன்மூலம் முன்னாள் ஜே.ஆர் ஜெயவர்தனவின் கனவை நனவாக்குவோம். அத்துடன் வடக்கு கிழக்கை பாரிய அபிவிருத்திக்கு உட்படுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தனவின் 110 ஜனன தின நிகழ்வு நேற்று ஜே.ஆர் ஜெயவர்தன கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

ஐரோப்பிய ஆதிக்கத்திற்கு ஆசியா சிக்குண்ட போது திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்தன ஆசியாவில் பொருளாதார புரட்சியை உருவாக்கினார்.  ஐரோப்பிய ஒன்றியத்திடம் தன்வசம் இருந்த தங்கத்தை வழங்கி நாணய நிதியத்திடம் கடன் பெறும் நிலையில் இந்தியா திகழந்தது. அவ்வாறான நிலைமை இலங்கைக்கு ஏற்படவில்லை.

எனினும் ஜே.ஆர். ஜயவர்த்தனவின்    திறந்த சந்தை பொருளாதார கொள்கையை கடைபிடித்து வியட்நாம் , இந்தியா மற்றும் சீனா போன்ற பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 1983 ஆம் ஆண்டு இனகலவரத்திற்கு பின்னர் ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக பொருளாதார வளர்ச்சியில் எமது வேகம் பெருமளவில் குறைந்தது. எனினும் மேற்கூறப்பட்ட நாடுகள் பெரும் வேகத்துடன் பயணித்தமையினால் பாரிய முன்னேற்றம் கண்டது.

 தற்போது யுத்தம் நிறைவடைந்து விட்டது. சிறப்பான பாதையை நோக்கி பயணித்த இலங்கையின் பொருளாதாரம் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தின் பின்னர் பாரிய வீழ்ச்சியை சந்தித்தது. எனவே திறந்த பொருளாதார கொள்கையை கொண்டு எம்மை முந்தி சென்ற வியட்நாம் ,சீனா மற்றும் இந்தியா போன்ற நாட்டின் தரத்திற்கு தேசிய அரசாங்கத்தின் ஊடாக இலங்கை கொண்டு வருவோம்.

இதன்மூலம் முன்னாள் ஜே.ஆர் ஜெயவர்தனவின் கனவை நனவாக்குவோம். அத்துடன் வடக்கு கிழக்கை பாரிய அபிவிருத்திக்கு உட்படுத்துவோம்.

  2050 ஆம் ஆண்டாகும்போது உலகில் மொத்த தேசிய உற்பத்தியில் 50 சதவீதத்தை ஆசியாவே எட்டிபிடிக்கும் என்றார்.