அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, ’SUPERBOX’ உடன் பிரத்தியேகமான பங்காண்மையை ஏற்படுத்தி பாதுகாப்பான கொடுப்பனவு கட்டமைப்பை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாக சிக்கல்களின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டின் அண்மையில் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட ஒன்லைன் சுப்பர் மார்கெட்டாக திகழும் SUPERBOX, பலசரக்கு பொருட்கள் விற்பனையில் விசேடத்துவம் பெற்றுள்ளது. இலங்கையர்களுக்கு சேவையாற்றும் நோக்கில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. 

வாடிக்கையாளர்களுக்கு பசுமையான, குளிர வைக்கப்பட்ட, உறைய வைக்கப்பட்ட மற்றும் உலர்ந்த பல தயாரிப்புகளை வழங்குகின்றது. 

சிக்கல்களில்லாத சொப்பிங் அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், இலங்கையின் நுகர்வோரின் நடத்தையை புரிந்துக்கொள்ளும் வகையில் ஆய்வு முன்னெடுக்கப்பட்டு பாவனையாளருக்கு நட்பான வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

இலகுவான மற்றும் பாதுகாப்பான முறையில் பல்வேறு டிஜிட்டல் கொடுப்பனவு முறைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கக்கூடிய தொழில்நுட்ப ரீதியான கட்டமைப்பான MasterCard Payment Gateway Service (MPGS) ஊடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் SUPERBOX உடன் செலான் வங்கி கைகோர்த்துள்ளது.

 

இந்தப் பங்காண்மையினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது வீடுகளில் சௌகரியமாக இருந்தவாறு தினசரி அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யமுடியும் என்பதுடன், அவற்றை தமது இருப்பிடத்துக்கு பாதுகாப்பாக விநியோகித்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

 

இதனூடாக இந்த நெருக்கடியான காலப்பகுதியில் அநாவசியமாக பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக செலான் வங்கியின் டிஜிட்டல் வங்கியியல் நாளிகைகளின் தலைமை அதிகாரி சமிந்த செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், 

“செலான் வங்கியுடனான பங்காண்மையின் காரணமாக, SUPERBOX வாடிக்கையாளர்களுக்கு தற்போது மேம்படுத்தப்பட்ட, பாதுகாப்பான மற்றும் வேகமான சொப்பிங் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். 

இந்த இணையத்தளத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு தமக்கென profile ஒன்றை உருவாக்கி, வெளிநாடுகளில் வசித்தாலும், இலங்கையிலுள்ள தமது அன்புக்குரியவர்களுக்கு விநியோகங்களை மேற்கொள்ள முடியும். 

உள்நாட்டு நிறுவனத்தின் உயர் தர பொறியியலுக்கு சிறந்த உதாரணமாக இது அமைந்துள்ளது. நுகர்வோரை கவனத்திற்கொண்டு அனுபவத்தின் ஒவ்வொரு அங்கமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நுகர்வோரின் சௌகரியத்துக்கு முக்கியத்துவமளிக்கும் நிறுவனம் எனும் வகையில் செலான் வங்கி, Mastercard Payment Gateway சேவையுடனான பங்காண்மை என்பது இலகுவான மற்றும் பாதுகாப்பான கொடுக்கல் வாங்கல் செயன்முறைகளை உறுதிசெய்யும் என்பதுடன், SUPERBOX இலிருந்து கொள்வனவு செய்யும் சகல நுகர்வோருக்கும் மோசடிகளை தவிர்த்துக்கொள்வதற்கும் உதவும். 

இதனூடாக உயர் தரம், வேகம் மற்றும் தங்கியிருக்கக்கூடிய ஒன்லைன் பலசரக்கு சொப்பிங் அனுபவத்தை வழங்குகின்றது.” என்றார்.

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் தமது டிஜிட்டல் நிதியியல் கட்டமைப்புகளை பயன்படுத்துமாறு செலான் வங்கி அனைவரையும் ஊக்குவிப்பதுடன், பாதுகாப்பை பேணுமாறும் கேட்டுக் கொள்கின்றது.

தமது வீடுகளில் சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் இருந்தவாறு சகல வங்கி சார் செயற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் கோருகின்றது. 

வங்கி தொடர்ச்சியாக தனது டிஜிட்டல் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதலீடுகளை மேற்கொள்வதுடன், சகல பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற ஒன்றிணைவை அனுமதிக்கின்றது. 

வாடிக்கையாளர்கள் செலான் வங்கியின் 24/7 ஹொட்லைன் இலக்கமான 011 2 00 88 88 உடன் தொடர்பு கொண்டு வங்கியின் தீர்வுகள் மற்றும் சேவைகள் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயற்படுகிறது. 

சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்களின் வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, 172 கிளைகள் மற்றும் நாடு முழுவதும் பரந்துள்ள 70 பண வைப்பு இயந்திரங்கள், 86 காசோலை வைப்பு இயந்திரங்கள் மற்றும் 216 ATMகள் கொண்ட வலையமைப்புடன் அதன் கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது. 

பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீடு A’(lka) ஆக தரமுயர்த்தப்பட்டு, செயற்றிறன் சிறப்பைக்கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ்பரன்சி குளோபல் நிறுவனத்தால் நிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மைக்காக பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், செலான் வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

மேலும் S&P Dow Jones SL 20 சுட்டெண்ணில் அங்கத்துவம் பெற்றுள்ள வங்கியாகவும் திகழ்கின்றது. இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான  அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

 

Superbox பற்றி

 

வாடிக்கையாளர்களின் இருப்பிடங்களுக்கு பலசரக்குப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை துரிதமாகவும், சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் விநியோகிக்கும் நோக்குடன் இந்த சேவை அமைந்துள்ளது. 

SUPERBOX பசுமையான, குளிர வைக்கப்பட்ட, உறைய வைக்கப்பட்ட மற்றும் உலர்ந்த பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு தயாரிப்புத் தெரிவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. நாட்டின் இரு முன்னணி வியாபார பிரபலங்கள் ஒன்றிணைந்து SUPERBOX ஐ நிறுவியுள்ளனர். 

இன்றைய காலகட்டத்தின் தேவையான உயர் தரம், வேகம் மற்றும் தங்கியிருக்கக்கூடிய ஒன்லைன் பலசரக்கு சொப்பிங் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கவும், விநியோகத்தை மேற்கொள்ளவும் உதவும் வகையில் அமைந்துள்ளது. 

‘End to End’ சுப்பர்மார்க்கெட் கொள்கை என்பதற்கமைய, SUPERBOX இனால் களஞ்சியப்படுத்தல், கொள்முதல், விலையிடல் மற்றும் தயாரிப்பு தெரிவு முதல் வீட்டு விநியோகம் வரை சகல செயற்பாடுகளும் கையாளப்படுகின்றன. 

ஒன்லைனில் பொருட் கொள்வனவில் ஈடுபடுவோருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த SUPERBOX, இலங்கையில் e-வணிக போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

SUPERBOX இல் காணப்படும் முழுமையான விற்பனைத் தெரிவுகளை வாடிக்கையாளர்கள் www.superbox.lk  எனும் இணையத்தளத்துக்கு விஜயம் செய்து அல்லது வாடிக்கையாளர் சேவை ஹொட்லைன் இலக்கமான 117-900 900 உடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.