11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.
ஆகஸ்ட் மாதத்தில் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் தொடராது என்று சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது.
2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் வழக்கில், கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM