2021 லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு காலி மற்றும் யாழ்ப்பாணம் அணிகள் தொடக்க ஆட்டத்தில் மோதும்.

தொடரின் முதல் சுற்றின் 20 ஆட்டங்கள் கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். 

அதனைத் தொடர்ந்து இறுதிச் சுற்று ஆட்டங்கள் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

லீக்கின் இறுதிப் போட்டிகள் 23 டிசம்பர் 2021 அன்று ஹம்பாந்தோட்டையில் நடைபெறும், அதேநேரம் டிசம்பர் 24 ஆம் திகதி இறுதிப் போட்டிக்கான 'ரிசர்வ் டே' ஆக ஒதுக்கப்பட்டுள்ளது.

2021 லங்கா பிரீமியர் லீக் இலங்கை கிரிக்கெட் நடத்தும் நாட்டின் தலைசிறந்த உள்நாட்டுப் போட்டியாகும், சர்வதேச வீரர்ளின் பங்கு பற்றலுடன் இம்முறை 24 போட்டிகளை கொண்டமைந்துள்ளது லீக் தொடர்.

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றில் முதல் சுற்றின் புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் விளையாடும்.

3 ஆவது மற்றும் 4 ஆவது இடத்தில் உள்ள அணிகள் ‘வெளியேறல்’ சுற்றில் பலப் பரீட்சை நடத்தும்.