மீரியபெத்தை மண்சரிவு : பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபாவளிக்கு முன்னர் வீடுகள்

Published By: MD.Lucias

19 Sep, 2016 | 08:08 PM
image

(க.கிஷாந்தன்)

மண்சரிவு இடம்பெற்று 2 வருடங்கள் நெருங்கியுள்ள நிலையில் தீபாவளிப் பண்டிகைக்கு முன்பதாக ஒக்டோபர் 22ஆம் திகதி வீடுகளை கையளிப்பதற்கு தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், வீடுகளில் காணப்படுகின்ற மின்சாரம், நீர், குறைப்பாடுகளை விரைவில் நிவர்த்தி செய்து மக்களிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப் போவதாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

 மீரியபெத்த மக்களுக்கு நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற வீடுகளை மக்களிடம் கையளிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்று மக்கள்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் திகாம்பரம், 

கொத்மலை பகுதியில் நான் எனது அமைச்சரவையின் கீழ் வீடுகளை குறுகிய காலத்தில் கட்டி முடித்துள்ளேன், 

ஆனால் இங்கு வீடுகளை கட்டி முடிப்பதில் சிரமம் காணப்படுகிறது.

 இதற்கு காரணம், இப்பிரதேசம் ஒரு அமைச்சிற்கு கீழ் வந்திருந்தால் 6 மாதத்தில் அல்லது 1 வருடத்தில் வீடுகளை கட்டி முடித்திருக்கலாம்.

 ஆனால் இங்கு பலதரப்பட்ட நிறுவனங்களின் தலையீட்டில் வீடுகள் நிருமாணிக்கப்பட்டு வருவதால் தாமதம் நிலவுவதாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்திருந்தார்.

 கொஸ்லாந்தை மீறியபெத்த பிரதேசத்தில் 2014.10.29 அன்று இடம்பெற்ற பாரிய மண்சரிவில் உயிர் நீத்த மக்களின் உறவினர்கள் தொடர்ந்தும் பூனாகலை மாகந்த தொழிற்சாலையில் தங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47