இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் வரவிருக்கும் சுற்றுப்பயணங்களுக்கான தேர்வுகளுக்குத் தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளார்.

Image

இதனால் இலங்கை கிரிக்கெட் வாரியம், மெத்யூஸை மீண்டும் பயிற்சியில் ஈடுபடவும் எதிர்கால சுற்றுப் பயணங்களுக்கான தேர்வில் இணைத்துக் கொள்ளவும் அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக மெத்யூஸின் வேண்டுகோளை அடுத்து, 2021 ஜூலை மாதத்தில் அவர் தேசிய கிரிக்கெட் கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.