இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் குலசேகர கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற விபத்தொன்றின் தொடர்பிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கடவத்த, ரன்முதுகல பகுதியில் வைத்து நுவான் குலசேகரவின் வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிளின் மீதே குலசேகரவின் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய 28 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார்.