தமிழக வெள்ள நிவாரணத்திற்காக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு லைக்கா நிறுவனம் சார்பாக 5 கோடி ரூபாய்க்கான காசோலை கையளிக்கப்பட்டது.

அண்மையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர் ஆகிய பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை புனரமைப்பதற்காகவும், மீட்பதற்காகவும் தமிழக முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு ஏராளமானவர்கள் தங்களால் இயன்ற பொருளுதவிகளை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மக்களின் பாதிப்புகளை உணர்ந்த லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன் லைக்கா நிறுவனத்தின் சார்பாக ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை, தமிழக அரசின் நிதித்துறை செயலர் நாயகம்  சண்முகம் அவர்களிடம் கையளித்தார்.

லைக்கா நிறுவனத்தின் இந்த தாராளமான நிதி உதவியை திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் பலரும் மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள்.

தகவல் : சென்னை அலுவலகம்