ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன விடயம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவ புலனாய்வு அதிகாரிகள் நால்வரையும் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை அவிசாவளை நீதிமன்றம் இன்று (19) பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்திருந்த நிலையில் இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.