அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் முறையற்ற அரச நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி கொழும்பில் இன்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது முன்னிலை சோசலிச கட்சியின் ஏற்பாட்டில்  லிப்டன் சுற்றுவட்டத்தில்  இடம்பெற்றது.

இதன்போது போராட்டக்காரர்கள் அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம் மற்றும் முறையற்ற அரச நிர்வாகத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்த போராட்டதை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.