(எம்.மனோசித்ரா)

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதற்கான விவாத நிகழ்ச்சி நிரல் தொடர்பில் பிரதமர் சமர்ப்பித்த ஒழுங்குபடுத்தல் விடயங்களை அமைச்சரவை கவனத்தில் எடுத்துள்ளது.

அதற்கமைய நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்பித்த பின்னர், வரவு செலவு விவாதம் ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 22 ஆம் திகதி வரை விவாதத்தை நடாத்துவதற்கும் , வரவு செலவுத் திட்டம் தொடர்பான செயற்குழு விவாதம் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும் , வரவு செலவுத் திட்டம் மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு நடாத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.