திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை அநுராதபுரச் சந்தியில் வைத்து இன்று (12)காலை போதை மாத்திரைகள், ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் காந்தி நகர் திருகோணமலை பகுதியை சேர்ந்த வயது (23) இளைஞன் எனவும் இவரிடமிருந்து 600 போதை மாத்திரைகளும், 4250 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த இளைஞன் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே திடீர் சுற்றிவலைப்பு மேற்கொள்ளப்பட்டதில் இவ்வாறு குறித்த இளைஞன்  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதையடுத்து கைது செய்யப்பட்ட நபரையும் உரிய போதை பொருளுடன்  உப்புவெளி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.