(எம்.மனோசித்ரா)
பாதுகாப்பான இணையத்தள ஏற்பாடுகள் எனும் பெயரிலான சட்டமூலத்தினை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்காக இணையவெளி மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல்களைப் பயன்படுத்துவதற்கு தூண்டப்பட்டுள்ளனர்.
இணையவெளி மூலம் மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் தொடர்பாடல்கள் தேசிய பாதுகாப்புக்கு நேரடி விளைவுகளை ஏற்படுத்தும் காரணி எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய பிரதிநிதித்துவ நிறுவனங்கள் தற்போது தத்தமது நிறுவன மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இணையத்தள பாதுகாப்பு அலகின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை மேலும் முறையான வகையிலும், வினைத்திறனாகவும் மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் தேவையான ஏற்பாடுகளை உள்வாங்கி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியதாக புதிய சட்டமொன்றை வகுப்பதற்கான தேவையுள்ளது.
அதற்கமைய இணையத்தள பாதுகாப்பு மற்றும் அதற்கான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குவது, தொழிநுட்ப அமைச்சின் விடயத்தலைப்பின் கீழ் காணப்படுகின்றது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு மற்றும் ஏற்புடைய ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னர், பாதுகாப்புத் துறையின் இணையத்தள பாதுகாப்பின் ஏற்பாடுகள் உள்ளடங்கலாக சட்டமூலம் தயாரிப்பது உகந்ததெனப் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM