கவிஞரும் தமிழ் சினிமா பாடலாசிரியருமான  பொத்துவில் அஸ்மின் எழுதிய "அண்ணாத்த" திரைப்படத்தின் புரொமோ பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தை வரவேற்கும் வகையில் ரஜினிக்கான ‘ஹூரோ அறிமுக பாடல் பாணியில்’ ‘வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த - நீ இனிமேலும் முடியாது ஏமாத்த’ என்னும் பாடலை கவிஞர் அஸ்மின் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடியுள்ள இப்பாடலை கிரிசான் மகேசன், ரோஜா சிவகுமார் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த ‘வர்ராரு.. வர்ராரு அண்ணாத்த'  சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

படலை பார்வையிட

https://www.youtube.com/watch?v=6pQlRQXbzrg