பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் திடீரென மரணமடைந்தார்.

தமிழில் இந்தியன், அந்நியன், பொய் சொல்லப் போறோம், சர்வம் தாளமயம் உட்பட பல நடிங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்து வந்தார். 

1948.05.22 அன்று கேரள மாநில ஆழப்புலாவில் பிறந்தவர் நெடுமுடி வேணு. வேணு சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

மூன்று தேசிய விருதுகள் மற்றும் ஆறு மாநில திரைப்பட விருதுகளை வென்று உள்ளார்.  சமீபத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதிலிருந்து மீண்டார்.

இந்த நிலையில் நேற்று ஒக்டோபர் 10 அன்று அவர் உடல்நிலை சரியில்லாமல் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ஒக்டோபர் 11 அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மலையாளத் திரையுலகில் நீண்ட காலங்கள் நடிராக பணியாற்றியவர் வேணு. ''யாத்ரா மொழி'' என்ற மலையாள படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் நடித்தார்.

இந்தியன் படத்தில் கமலஹாசனுடன் துப்பறியும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.யதார்த்தவியல் நடிப்பின் நாயகன் என மலையாளத் திரையுலகில் பெயர் எடுத்தவர் நெடுமுடி வேணு.

மலையாளப் பிரபலங்களான மது,பிரேம் நஸீர்,ஜெயன்,சோமன்,சத்யன், மம்முட்டி,மோகன்லால்,சுரேஷ் கோபி,பிருத்விராஜ் போன்ற அனைத்து நடிகர்களுடனும் நடித்தவர் வேணு.

அருமையான இக்கலைஞரின் இழப்பு கலையுலகில் ஈடில்லாதது.பிரதாப் போத்தன் கதாநாயகனாக நடித்த ''தக்காரா''என்ற மலையாளப்படம் இலங்கையில் வெற்றிகரமாக ஓடியது.

இப்படத்தில் '' செல்லப்பன் ஆச்சாரி'' என்ற மர வேலைகள் செய்யும் தொழிலாளியாக வேணு நடித்திருப்பார்.இப்படம் பின்னாளில் '' ஆவாரமாம்பூ'' என்ற பெயரில் தமிழில் வெளியானது. மலையாளத்தில் நெடுமுடி வேணு செய்த வேடத்தை தமிழில் கவுண்டமணி செய்தார்.

இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை,மலையாள திரையுலகினருக்கும், நெடுமுடி வேணு அவர்களின் உறவுகளுக்கும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ்