டோக்கியோ பராலிம்பிக்கில் இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த வீரர்கள் கௌரவிப்பு

Published By: Digital Desk 4

11 Oct, 2021 | 10:12 PM
image

(‍எம்.எம்.சில்வெஸ்டர்)

டோக்கியோ பராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சனால் 5 கோடி ரூபா பணப்பரிசும், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறவனத்தினால் ஒரு கோடி ரூபா பணப்பரிசும் என மொத்தமாக 6 கோடி ரூபா பணப்பரிசு கிடைத்தது.  

இது  இலங்கை விளையாட்டு துறை வரலாற்றில் தனிநபர் விளையாட்டுப் பிரிவில் வெற்றியீட்டிய ஒருவருக்கு  வழங்கப்பட்ட அதிகூடிய பணப்பரிசுத் தொகையாக அமைந்தது.  டோக்கியோ பராலிம்பிக்கில் சாதித்தவர்களுக்கு ஒட்டு ‍மொத்த பணபரிசுத் தொகையாக 10 கோடியே 66 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும். 

பராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற துலான் கொடிதுவக்குவுக்கு வி‍ளையாட்டுத்துறை அமைச்சினால் 2 கோடி ரூபா பணப்பரிசும், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் 10 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. இவர்கள் இருவரினதும் பயிற்றநரான பிரதீப் நிஷாந்தவுக்கு ஒரு கோடியே 77 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா  பணப்பரிசும் விளையாட்டுத் துறை அமைச்சினால் வழங்கப்பட்டது.

டோக்கியோ பராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று கொடுத்த தினேஷ் பிரியன்த, துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட பராலிம்பிக் வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்றுநர்களை கெளரவிக்கும் நிகழ்வு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் இன்று மாலை விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

டோக்கியோ பராலிம்பிக்கில் பதக்கம் வென்று கொடுத்துவர்களையும், டோக்கியோ பராலிம்பிக்கின் திறமைகளை வெளிப்படுத்திய  நான்கு வீரர்களும், ஒரு  வீராங்கனையும் அடங்கலாக  ஐந்து மெய்வல்லுநர்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டன. இதில், ஆண்களுக்கான பிரிவு 63 இல் குண்டெறிதல் ‍போட்டியில் 5 ஆவது இடத்தை பிடித்த பாலித்த ஹல்கஹவெலவுக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு விளையாட்டுத்துறை அமைச்சினால் வழங்கப்பட்டது.

 இதைத்தவிர, படகோட்டப் போட்டியில் பங்கேற்று 12 ஆவது இடத்தைப் பிடித்த பிரியமல் ஜயகொடி, ஈட்டி எறிதல் வீரர் சம்பத் ஹெட்டியாராச்சி, குறுந்தூர ஓட்ட வீரரான  9 ஆவது இடத்தைப் பிடித்த சமன் சுபசிங்க, குறுந்தூர ஓட்ட வீராங்கனையும் நீளம் பாய்தல் வீராங்கனையுமான குமுது பிரியன்கா ஆகி‍யோருக்கு தலா 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

இவர்களின் சிறந்த ஆற்றல்களை வெளிக்கொண்டு வந்து சிறந்த பயிற்சிகளை வழங்கியிருந்த பயிற்றுநர்களுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சினால் பணப்பரிசு வழங்கப்பட்டது. 

இதில் பாலித்த ஹல்கஹ‍வெலவின் பயிற்றுநரான யூ.பி.டி. பெரேராவுக்கு 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணப்பரிசும், சமன் சுபசிங்கவின் பயிற்றுநரான சஜித் ஜயலால், குமுது பிரியன்காவின் பயிற்றுநரான ஏ.ஆர்.ரத்நாயக்க மற்றும் பிரியமல் ஜயகொடியின் பயிற்றுநரான லசன்த்த வெலிக்கல ஆகியோருக்க தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சினால் மெய்வல்லுநர் வீரர்களுக்கு 7 கோடியே 65 இலட்ச ரூபா பணப்பரிசும், பயிற்றுநர்களுக்கு ஒரு கோடியே 91 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. இது தவிர, ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒரு கோடி 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.  ஒட்டுமொத்தத்தில்  10 கோடியே 66 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணப்பரிசு மழை பொழியப்பட்டது.

(படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய விளையாட்டு விழா 50 மீ....

2023-09-29 13:38:37
news-image

54ஆவது வருடாந்த செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப்...

2023-09-29 10:26:40
news-image

தனுஷ்க மீதான கிரிக்கெட் தடையை நீக்குவது...

2023-09-28 20:30:51
news-image

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது -...

2023-09-28 16:19:57
news-image

தனுஸ்க குறித்தநீதிமன்ற தீர்ப்பு - தசுன்...

2023-09-28 14:27:10
news-image

FFSL தேர்தலில் தக்ஷித்த தரப்பினர் வெற்றிபெறுவது...

2023-09-28 13:38:45
news-image

தனுஸ்க பாலியல் உறவின் போது ஆணுறையை...

2023-09-28 11:43:12
news-image

கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி; தொடர்...

2023-09-28 12:09:25
news-image

தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர்-...

2023-09-28 08:05:35
news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16
news-image

இளைஞர் விளையாட்டு விழா கடற்கரை கரப்பந்தாட்டடம்...

2023-09-27 10:24:38
news-image

லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு...

2023-09-27 10:31:59