ராஜபக்ஷர்களின் பலவீனமான நிர்வாகத்தை நாட்டு மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் - மக்கள் விடுதலை முன்னணி

Published By: Gayathri

11 Oct, 2021 | 08:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதும், தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவதும் தற்போதைய முக்கிய விடயமல்ல. மக்கள் அரசியலமைப்பு ரீதியில் நெருக்கடிக்குள்ளாகவில்லை. வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பெரும் சுமையை எதிர்க்கொண்டுள்ளார்கள். 

அத்தியாவசியப் பொருட்களின் விலையை வர்த்தகர்கள் தீர்மானிப்பார்களாயின் ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும் மக்களின் வரிப்பணம் வீணான வகையில் செலவு செய்யப்படுகிறது என்றே அர்த்தப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் அரசியல் வருகை நாட்டை பொருளாதார ரீதியில் தன்னிறைவாக்கும், பொருளாதாரம் முன்னேற்றமடையும் என புகழ்பாடியவர்கள் தற்போது எந்த முகத்துடன் மக்கள் மத்தியில் உரையாடுகிறார்கள்.

கறுப்பு பண சுத்திகரிப்பு குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்ட நபரை நிதியமைச்சராக தெரிவு செய்துள்ள ஒரு நாடு இலங்கை தான். ராஜபக்ஷர்களின் பலவீனமான நிர்வாகத்தை நாட்டு மக்கள் இனியாவது விளங்கிக் கொள்ளவேண்டும்.

இவர்களால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது. மிகுதியாக உள்ள வளங்களை கொள்ளையடிக்கதான் இவர்களுக்கு முடியும் எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்

அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர குறைவடையவில்லை. நாட்டில் அரசாங்கம் ஒன்று இருக்கிறதா? என்பதை எண்ணும் அளவிற்கு அரிசி உரிமையாளர்களும், வர்த்தகர்களும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

இராணுவத்தின் 72 ஆவது தினத்தையொட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய உரை கவனிக்கத்தக்கது. இரண்டு வருட காலத்திற்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி நினைவில் உள்ளது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தின்போது தேர்தல் பிரசார மேடைகளில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொதி வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உரம் இலவசமாக வழங்குவதாகவும், எரிவாயு சிலின்டருக்கு 100ரூபா வீதம் நிவாரணம் வழங்குதாகவும், சீனி, நெத்தலி, மிளகாய் ஆகிய அத்தியாவசியப் பொருட்களை நிவாரண அடிப்படையில் வழங்குவதாகவும் ஜனாதிபதியின் சகாக்கள் மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.

 கடந்த இரண்டு வருட காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்த தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்களினால் நாடு அனைத்து துறைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் தவறான தீர்மானத்தினால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளார்கள். விவசாயிகள் எதிர்க்கொண்டுள்ள பாதிப்பை ஒட்டுமொத்த மக்களும் வெகுவிரைவில் எதிர்க்கொள்ள நேரிடும். விவசாயத்துறை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை வரையறையில்லாமல் அதிகரித்த நிலையில் உள்ளது. மத்திய வங்கி குறுகிய காலத்திற்குள் சுமார்2 ரில்லியன் அளவு நாணயத்தை அச்சிட்டுள்ளது.

மறுபுறம் மக்களின் வாழ்க்கை செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின வாழ்க்கை தரமும், மாத சம்பளமும் அதிகரிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில்தான் கோதுமை மா, சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை இரத்து செய்யப்பட்டு தற்போது விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

டொலர் பிரச்சினையின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை. ஜனாதிபதி வாய்சொல் வீரராக இருந்தாலும் இறுதியில் அரசியின் விற்பனை விலையை பிரதான அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன தீர்மானித்தார்.

அதேபோல் பால்மா, கோதுமை மா, சீமெந்து, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை நிறுவனத்தினர் தீர்மானிக்கிறார்கள். ஆகவே இது டொலரினால் ஏற்பட்ட பிரச்சினையல்ல.

பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 14 ரூபாவினாலும், டீசலின் விலையை 32 ரூபாவினாலும் அதிகரிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. 

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவின்  அரசியல் வருகைக்கு பின்னர் பொருளாதாரம் தன்னிறைவடையும், மக்கள் செல்வ செழிப்போடு வாழ்வார்கள் என்று புகழ்பாடியவர்கள், இன்று எந்த முகத்துடன் மக்கள் மத்தியில் கருத்துரைக்கிறார்கள்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மீது நிதிக்குற்றச்சாட்டு காணப்படுகிறது. கறுப்பு பணம் சுத்திகரிப்பு குற்றச்சாட்டினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு நபர் நிதியமைச்சராக பதவி வகிக்கும் ஒரு நாடு இலங்கை .இது கின்னஸ் சாதனை.இவ்வாறானவரால் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

மேல்மாகாணத்தில் 95 சதவீதமான மக்கள் சமையல் எரிவாயுவை பயன்படுத்துகிறார்கள்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போதைய எரிவாயு விலையேற்றம் பெரும் சுமையாக உள்ளது.

மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நிவாரணம் என்ன? அரசாங்கத்திடம் எவ்வித திட்டமும் கிடையாது. வர்த்தகர்கள் பொருட்களின் விலையை தீர்மானிப்பார்களின் ஜனாதிபதிக்கும், அமைச்சரவைக்கும் மக்களின் வரிப்பணம் செலவு செய்வது வீண் செலவு.

மக்கள் இனியாவது ராஜபக்ஷர்களின் பலவீனமான நிர்வாகத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். இவர்களால் பொருளாதாரத்தை ஒருபோதும் மேம்படுத்த முடியாது.

இருக்கும் வளங்களை கொள்ளையடிக்க தான் இவர்களுக்கு முடியும். பலவீனமான நிர்வாகத்திற்கு மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.

நாட்டு மக்கள் அரசியலமைப்பு ரீதியிலான பிரச்சினைகளை எதிர்க் கொள்ளவில்லை. அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவே அரசியலமைப்பு திருத்தம் செய்யப்படுகிறது. தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிப்பது மக்களை மூடர்களாக்கும் செயற்பாடாகும்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்து செய்தால்தான் நாட்டை முன்னேற்ற முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார். அவரது விருப்பத்திற்கு அமைய 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரினார் மக்கள் அதனையும் வழங்கினார்கள். ஆனால் ஜனாதிபதி எதனையும் முறையாக செயற்படுத்தவில்லை. தற்போது தேர்தல் முறைமை ஊடாக அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கிறார். இதற்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்க கூடாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48