நடிகர்கள் ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'கோல்மால்' என பெயரிடப்பட்டிருக்கிறது.
கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தின் கதாசிரியருமான பொன் குமரன், 'கோல்மால்' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நட்சத்திர ஹொட்டேலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் 'கோடியில் ஒருவன்' பட புகழ் நடிகர் விஜய் அண்டனி, தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குனர் பொன் குமரன் பேசுகையில்,
''இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கே.பாக்யராஜ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றினேன். தமிழில் திரைப்படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு.
ஆனால் தொடர்ந்து கன்னடத்தில் வாய்ப்பு கிடைத்ததால் அங்கு படங்களை இயக்கி வருகிறேன். கொரோனா காரணமாக கிடைத்த ஓய்வில் எப்பட தயாரிப்பாளரைச் சந்தித்து குறைந்த பட்ஜட்டில் பேய் கதை ஒன்றையும், நகைச்சுவை கதை ஒன்றையும் சொன்னேன்.
அவர் நகைச்சுவை கதையை முதலில் திரைப்படமாக உருவாக்கலாம் என்றார். அதன் பிறகு இந்தியில் வெளியான 'கோல்மால்' படத்தின் தமிழ் ரீமேக்கை உங்களுடைய பாணியில் இயக்கி தாருங்கள் என்றார்.
இந்தப்படத்தில் நடிகர்கள் ஜீவா, மிர்ச்சி சிவா, மனோ, சுப்பு பஞ்சு, ஜார்ஜ் மரியான், கன்னட நகைச்சுவை நடிகர் சாது கோகிலா, நடிகைகள் பாயல் ராஜ்புத், தான்யா ஹோப், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஆறிலிருந்து அறுபது வயது வரை உள்ள அனைவரும் குடும்பத்துடன் இரசிக்கும் வகையில் பொழுதுபோக்கு படமாக ''கோல்மால்'' உருவாகிறது'' என்றார்.
ஜாக்குவார் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வினோத் ஜெயின் பிரம்மாண்டமான பட்ஜட்டில் ‘கோல்மால்’ படத்தை தயாரிக்கிறார். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'கோல்மால்' படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்படும் இந்த படத்தின் முழு படபிடிப்பும் மொரிசியஸ் தீவில் நடைபெறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM