புகையிரத சேவையை மீள ஆரம்பிக்க அவதானம்

Published By: Digital Desk 4

11 Oct, 2021 | 03:57 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத சேவையை மீள ஆரம்பிக்கும் திகதி குறித்து இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மாகாணங்களுக்கிடையிலான புகையிரத போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சும்,போக்குவரத்து அமைச்சும் ஒன்றிணைந்து செயற்படுவதாக புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை நாடு தழுவிய ரீதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம்  திகதி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இம்மாதம்(ஒக்டோபர்) முதலாம் திகதி தளர்த்தப்பட்டது.இருப்பினும் மாகாணங்களுக்கிடையில் பொதுபோக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

 மாகாணங்களுக்கிடையிலும்,மாகாணங்களுக்குள்ளும் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையை இரண்டு வார காலத்திற்கு ஆரம்பிக்க போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கவில்லை.

எதிர்வரும்15ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பதை குறிப்பிட முடியாது.

பயணிகள் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்;டதும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய புகையிரத சேவையை ஆரம்பிக்க திட்;டமிடப்பட்டுள்ளது.

புகையிரத்திற்குள்  சன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவைக்காக தினசரி 130 புகையிரத பயணங்களை சேவையில் ஈடுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.என்றார்.

 அத்தியாசிய தேவைக்காக மாகாணங்களுக்கிடையிலான அரச பேருந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது மேல்மாகாணத்திற்குள் மாத்திரம் சுமார் 1500 அரச பேருந்துகள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுகின்றன.

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டதும் அரச பேருந்து சேவை விரிவுப்படுத்தப்படும்.என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்சி ரணவக்க இந்த ஊடகச்சந்திப்பில் கலந்துக் கொண்டு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-11-08 06:58:12
news-image

மட்டு வந்தாறுமூலையில் மின்னல் தாக்கி விவசாயி...

2024-11-08 03:21:20
news-image

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை:...

2024-11-08 02:59:43
news-image

செல்வம் அடைக்கலநாதன் தலைவர் பதவியில் இருந்து...

2024-11-07 23:01:31
news-image

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு ஆளுனருடன்...

2024-11-07 21:36:56
news-image

கொழும்பில் காற்றின் தரம் குறைந்து இருள்...

2024-11-07 20:11:57
news-image

வென்னப்புவவில் துப்பாக்கிச் சூடு

2024-11-07 19:46:46
news-image

ஊடகங்களுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன் அரசாங்கத்தால் முன்னோக்கிப்...

2024-11-07 17:00:16
news-image

கிழக்கை காப்பாற்ற வேட்டுமாயின் வடக்கு மக்கள்...

2024-11-07 19:27:48
news-image

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவை நியமிக்காமல் மின்சார கட்டணத்தை...

2024-11-07 16:58:57
news-image

களுத்துறையில் மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி...

2024-11-08 06:03:24
news-image

காணாமல்போன பெண் சடலமாக மீட்பு!

2024-11-08 06:04:14