அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகரான சிட்னியில் சுமார் 106 நாள் பொது முடக்கம் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய மக்கள் பொது முடக்கம் முடிவுக்கு வந்ததை சுதந்திர தினம் என கூறி மகிழ்ச்சியில் கொண்டாட ஆரம்பித்துள்ளார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பொது முடக்கம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், அத்தியாவசியமற்ற சேவைகளும் திறக்கப்பட்டதால் மக்கள் முடி வெட்டுவதற்கும், கடைகளுக்கும், உடற்பயிற்சி நிலையங்களுக்கும் சென்றனர்.

தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் திங்கள் நிலவரப்படி 61.9 சதவிகிதம் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  82.2 சதவிகிதம் பேருக்கு குறைந்தபட்சம் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், கடந்த 24 மணித்தியாலங்களில் 496 தொற்றாளர்களும், 8 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்டைய மாநிலமான விக்டோரியாவில் 1,612 தொற்றாளர்களும் 8 மரணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.