நாட்டின் ஆட்சியை மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு மக்கள் விரும்பமாட்டார்கள். இன்னும் 20 வருடங்கள் செல்லும் வரைக்கும் அவரால் அதிகாரத்துக்கு வரமுடியாது என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற கட்சி மாவட்ட சம்மேளனத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.