ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியின் துணை அதிகாரியை கைதுசெய்துள்ளதாக ஈராக் பிரதமர் முஸ்தபா அல்-காதிமி திங்களன்று தெரிவித்துள்ளார்.

அபு பக்கர் அல்-பாக்தாதி 2019 இல் சிரியாவில் நடந்த சிறப்பு அமெரிக்க நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். 

இறுதியில் அல் பாக்தாதியின் மரணத்தை இஸ்லாமிய அரசான ஐ.எஸ்.ஐ.எஸ். உறுதிபடுத்தியது.

இந் நிலையில் தற்சமயம் கைதுசெய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ள சாமி ஜாசிம் முஹம்மது அல்-ஜபுரி என்று நம்பப்படும் நபர், முன்பு  இஸ்லாமிய அரசின் நிதி விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தமை தெரியவந்துள்ளது.