ஹாலிஎல - ஊவா பாடசாலையில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ விபத்தில்  படுகாயமடைந்த நிலையில்  பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.

இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

......................................................

ஹாலிஎல - ஊவா பாடசாலையில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் கல்விசாரா ஊழியர் ஒருவர் எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தீ விபத்தில் களஞ்சியசாலையில் ஒட்டுதல் (வேல்டிங்) பணியில் ஈடுபட்ட 39 வயதான  ஒருவரே காயமடைந்துள்ளார்.

இதேவேளை தீ கட்டிடங்களுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.