கோதுமை மா,சமையல் எரிவாயு, சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களின் புதிய விலை அறிவிப்பு

Published By: Digital Desk 4

11 Oct, 2021 | 06:53 AM
image

(இராஜதுரை ஹஷான்)

கோதுமை மா,சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களின் புதிய விலை  அறிவிக்கப்படும் என பிரதான நிலை வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கி வெளியானது  வர்த்தமானி | Virakesari.lk

கோதுமை மா 20 ரூபாவிலும்,50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பெக்கட்டின் விலை 200 ரூபாவினாலும், லாப்ரக சமையல் எரிவாயுவின் விலையில் 200 ரூபா தொடக்கம் 500ரூபா வரையில் மாற்றம் ஏற்படும்.

கோதுமை மா, சமையல் எரிவாயு, சீமெந்து,மற்றும் இறக்குமதி செய்யப்படும் பால்மா ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து சமையல் எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றின் விற்பனை விலையில் மாற்றம் ஏற்படும் என குறிப்பிட்டப்பட்டதன் பின்னர் ஒரு சில பிரதான நகரங்களில் உள்ள சமையல் எரிவாயு விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், சந்தையில் கோதுமை மா தட்டுப்பாடு நிலவுவதையும் காண முடிகிறது.

களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலின்டர்கள்  பிரதான நகரங்களில் இயங்கும் சிற்றுண்டிசாலைகளுக்கும், இதர தொழிற்துறைகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு விநியோகிப்பதற்கு எரிவாயு சிலின்டர் தம்வசமில்லை. என சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் கோதுமை மாவின் விற்பனை விலை இன்று முதல் அதிகரிக்கப்படும்  என்று குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து ஒரு சில நகரங்களில் கோதுமை மா சில்லறை விற்பனைக்கு கூட நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுவதில்லை.இதனால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளனர்.

கோதுமை மா

கோதுமை மாவின் விற்பனை விலையை 15 தொடக்கம் 20 வரையில் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு கோதுமை மா இறக்குமதி வர்த்தகர்கள் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்கோரிக்கை தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கும்,கோதுமை மா வர்த்தகர்களுக்கும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விற்பனை விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள போதும் கோதுமை மா வர்த்தகர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஒருகிலோகிராம்  கோதுமை மாவின் விற்பனை விலையை 20 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக கோதுமை மா வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மா 87 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

 தேசிய பால்மா உற்பத்தி

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 250 ரூபாவினாலும்,400 கிராம் பால்மாவின் விலை 100 ரூபாவினாலும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறான நிலையில் தேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசேகர நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய பால்மா உற்பத்தி செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நட்டமடைந்த நிலையில் தற்போது தேசிய பால்மா உற்பத்தியில் ஈடுப்படுகிறோம்.இது தவறான செயற்பாடாகும். இதன் தாக்கத்தை பாற்பண்ணையாளர்கள் எதிர்க்கொண்டுள்ளார்க்ள. பால்மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளமை தேசிய மட்டத்திலான பால்மா பாவனைக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.எனவும் மில்கோ நிறுவனத்தி;ன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

 சீமெந்து

50கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பெக்கட்டின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.இதற்கமைய சீமெந்து பெக்கட்டின் புதிய விலை 1205 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு

லாப்ரக சமையல் எரிவாயு சிலின்டரின் விற்பனை விலையை அதிகரிக்குமாறு லாப்ரக சமையல் எரிவாயு நிறுவனத்தினர் நுகர்வோர் அதிகார சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். லாப்ரக சமையல் எரிவாயுவின் புதிய விலையை 200 ரூபா தொடக்கம் 500 வரையில் அதிகரிக்குமாறு லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 12.5 கிலோகிராம் நிறையுவடைய லாப்ரக சமையல் எரிவாயுவின் விலை 363 ரூபாவினாலும்,5கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.

 லிட்ரோ ரக சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்குமாறு லிட்ரோ பாதுகாப்பு ஒன்றினைப்பினர் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.1200 ரூபா விலை அதிகரிப்பிற்கு நுகர்வோர் அதிகார சபையும், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் 500 ரூபாவினால் விலை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.இதற்கு லிட்ரோ நிறுவனத்தினர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுவதற்கும், வர்த்தகர்களின் நியாயமற்ற செயற்பாடுகளுக்கும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் கடுமையான அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன்,எதிர்வரும் நாட்களில் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது தொடர்பிலும் அவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

88 வயதில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில்...

2025-03-27 09:11:56
news-image

ஹங்குரன்கெத்த பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்றத்...

2025-03-27 09:00:03
news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04