இந்திய வியூகத்தில் சிக்கியதா இலங்கை?

Published By: Digital Desk 2

10 Oct, 2021 | 07:34 PM
image

ஹரிகரன்

“13 ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கம், மாகாணசபைத் தேர்தல்கள் போன்றவிடயங்களில் இந்தியாவின் கவனம் இருப்பதாக தோன்றினாலும்- அதற்கு அப்பால் இலங்கையில்இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவாதங்களைப் பெறுவது ஷிரிங்லாவின் முக்கியநோக்கமாக இருந்தது”

இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஷிரிங்லாவின் நான்கு நாள், இலங்கைப் பயணம், பிராந்திய அரசியலில் முக்கிய கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவல் போன்றோர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது இல்லாதளவுக்கு கவனிப்புக்குரியபயணமாக ஷிரிங்லாவின் பயணம் இடம்பெற்றிருக்கிறது.

ஷிரிங்லாவின் இந்தப் பயணத்தின் பிரதான நோக்கங்கள் வடக்கு- கிழக்கையும் கொழும்பையும் மையப்படுத்தியதாகவே இருந்தது.

ஆனால் அவர் முதலில் கண்டிக்குத் தான் சென்றிருந்தார்.

தலதா மாளிகையில் வழிபாடு நடத்திய பின்னரே அவர்இ திருகோணமலை, யாழ்ப்பாணம்ஆகிய இடங்களுக்கான பயணங்களை மேற்கொண்டிருந்தார்.

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த ஷிரிங்லாவின் தந்தை ஒரு பௌத்தர், தாயார்ஒரு இந்து. அந்த வகையில் அவர் ஒரு பௌத்த பாரம்பரியத்தின் பின்னணியில் தலதா மாளிகையைதரிசிப்பதற்காக கண்டிக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கலாம்.

அல்லது வடக்கு, கிழக்கை மையப்படுத்திய தனது பயணங்களைத் தெற்கில் சமநிலைப்படுத்திக்கொள்வதற்காக அவர், கண்டிக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.

ஷிரிங்லாவின் பயணத்துக்கு சில நாட்களுக்கு முன்னதாக கொழும்பு துறைமுகத்தின்மேற்கு கொள்கலன் முனையத்தை அமைக்கும் பொறுப்பு அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட பின்னர், இந்திய வெறுப்பு தெற்கில் கொந்தளிக்கத் தொடங்கி விட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-10#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்