எம்.எஸ்.தீன் 

மு.கா.வின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையேகருத்து முரண்பாடுகள் காணப்பட்டாலும், இந்த முரண்பாடுகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தல்வரையுமே நீடிக்கும். ஏனெனில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ரவூப் ஹக்கீமுக்குமிடையேகருத்து முரண்பாடு தற்போது மட்டுமல்ல இதற்கு முன்னரும் பல தடவைகள் ஏற்பட்டுள்ளன. 

அவர்களைரவூப் ஹக்கீம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஆயினும், தேர்தலில் இவர்களையே மீண்டும்போட்டியிடச் செய்வார். அதுவே வழமையாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எதிராக அக்கட்சியின் செயற்பாட்டாளர்களினால்மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவில் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. 

இதற்கு பின்னால் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இயக்குநர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக செயற்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச்சேர்ந்த சாகுல் ஹமீட் முஹமட் முஜாஹிர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் அப்பதவியிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அரச வர்த்தமானி மூலமாக அறிவித்தல்வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் மன்னார் பிரதேச சபையில் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளமுஸ்லிம் காங்கிரஸிற்கு தவிசாளர் பதவியை பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற முயற்சியை முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் ஹ{னைஸ் பாறூக் எடுத்தார். 

இவரது இந்த முயற்சிக்கு ரவூப் ஹக்கீம்ஆதரவு வழங்கவில்லை என்றும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அப்பதவி வழங்க வேண்டுமென்றுஅவர் சொன்னதாகவும் சொல்லப்படுகின்றது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-10#page-2

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.