கொழும்பு, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று இடம்பெற்றது.

பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி அதிபர் திரு. ஐயம்பிள்ளை ராஜரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் கே.மதிவாணன் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, நுவான் குலசேகர ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கல்லூரியின் 1991 ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் நிதி பங்களிப்பில், இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஊடக குறித்த கிரிக்கெட் வலைப்பயிற்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.