சுபத்ரா

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர், ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லா, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை பார்வையிடச் சென்றமை, புதிய சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது.

பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த எண்ணெய்த் தாங்கிகள், மீண்டும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லா திருகோணமலையில் இருந்து  யாழ்ப்பாணத்தைச் சென்றடைவதற்கு முன்னரே, எண்ணெய்த் தாங்கிகள் பற்றிய சர்ச்சை, தீயை விட வேகமாகப் பற்றியெரியத் தொடங்கி விட்டது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பான உடன்பாட்டை, இந்தியா புதுப்பிக்கப் போகிறது என்று எதிர்க்கட்சிகளும், பௌத்த பிக்குகளும் போர்க்கொடி உயர்த்த தொடங்கி விட்டனர்.

ஓமல்பே சோபித தேரர், எஞ்சியுள்ள 85 எண்ணெய் தாங்கிகளையும், இந்தியாவிடம் கையளிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது என்றார்.

2024 ஆம் ஆண்டுடன் முடியப்போகும், உடன்பாட்டை புதுப்பிக்க அரசாங்கம் திட்டமிடுகிறதா என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அமைச்சர் உதய கம்மன்பில வெறுப்புடன் பதிலளித்திருந்தார்.

“அங்குள்ள 100 எண்ணெய் தாங்கிகளுமே இந்தியாவிடம் தான் இருக்கின்றன.

2003இல் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு 20 ஆண்டுகளில் முடிவடைவதல்ல. அது 35 ஆண்டுகள் வரை செல்லுபடியானது.

அதற்குப் பின்னரும் கூட அந்த எண்ணெய் தாங்கிகள் இந்தியாவிடம் தான் இருக்கும்.

ஏனென்றால், எண்ணெய் தாங்கிகள் 1987இல் இந்திய இலங்கை உடன்பாட்டின் மூலமே இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டு விட்டது” என்று அவர் பதில் கொடுத்திருந்தார்.

தேசியம் பேசுகின்ற, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, திஸ்ஸ விதாரண போன்ற அமெரிக்க, இந்தியா எதிர்ப்புவாதிகளுக்கு, இப்போதைய அரசாங்கம் கடுமையான எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-10#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.