சத்ரியன்

“ தற்போதைய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே உள்நாட்டு மக்களின் வெறுப்பை அதிகளவில் சம்பாதித்துக் கொண்டுள்ள நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு புறச்சக்திகளின்தேவை அவசியமா” 

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சர்வதேச அளவில் தன் மீதும் தனது அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு எடுத்திருக்கும் கரிசனை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது”

இலங்கைக்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவைச் சந்தித்த போது, இலங்கை ஒரு நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தைக்கொண்ட நாடு என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

ஒருபோதும், இங்கு எதேச்சாதிகார அல்லது அதிகாரத்துவ ஆட்சி நிலவவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

2005 தொடக்கம், 2015 வரை காணப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின்காலத்தை, ஜனநாயக ஆட்சிக்காலமாக உலகம் எடுத்துக் கொண்டிருக்கவில்லை.

அந்த ஆட்சிக்காலம் இலங்கையின் இருண்ட ஆட்சிக்காலம் என்று வர்ணிக்கப்பட்டது.எதேச்சாதிகார ஆட்சி என்றும், அதிகாரத்துவ ஆட்சி என்றும் குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் முன்வைக்கப்பட்டிருந்தன.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தவறுகள் இடம்பெற்றன என்பதை, 2015இல் ஆட்சியை இழந்த பின்னர் ராஜபக்ஷவினர் ஒப்புக் கொண்டிருந்தனர்.

இனிமேல் தவறுகள் நடக்காது என்று அவர்கள் கொடுத்த வாக்குமூலங்கள்,தவறுகள் நிகழ்த்தமையைத்தான், வெளிப்படுத்தியிருந்தன.

அதனை ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் தெரிந்தோ தெரியாமலோ ஞாபகப்படுத்தியிருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

தனது ஆட்சிக்காலத்தில் சுதந்திரமாக போராட்டங்களை நடத்த முடிகிறது என்றும், அதற்கான இடத்தைக் கூட ஒழுங்கு செய்து கொடுத்திருப்பதாகவும், போராட்டம் நடத்துபவர்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-10#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.