நடக்குமா தேர்தல்?

Published By: Digital Desk 2

10 Oct, 2021 | 06:08 PM
image

கபில்

இந்தியா ஹவுசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஷ்ரிங்லா, மாகாணசபைத் தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தப் போவதாக கூறியிருந்தார்.

அந்தச் சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் பார்த்து, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் ஏதாவது சட்டச் சிக்கல்கள் உள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தார் ஷ்ரிங்லா.

அதற்கு சுமந்திரன், அப்படியான எந்த சட்டச் சிக்கலும் இல்லை என்று பதிலளித்திருக்கிறார். இந்த தகவலை வெளியிட்டது கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் தான்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளன என்ற தோற்றப்பாட்டை புதுடெல்லிக்கு கொழும்பு ஏற்படுத்தியிருக்கிறது என்பதையே, ஷ்ரிங்லாவின் இந்த கேள்வி வெளிப்படுத்தியுள்ளது.

2017ஆம் ஆண்டுக்கும், 2019ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், எல்லா மாகாணசபைகளினதும், ஆயுட்காலங்கள் முடிந்து விட்டன.

இப்போது ஆளுநர்களே எல்லா மாகாணசபைகளையும் கட்டி ஆளுகிறார்கள். கொழும்பில் இருந்து பிறப்பிக்கப்படுகின்ற உத்தரவுகள் ஆளுநர்களால் செயற்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், நீண்டகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்ற மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தும்படி, இந்தியாவிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போது கூட, ஷ்ரிங்லா, இதனை வலியுறுத்தியிருக்கிறார். இதனை இந்தியத் தரப்பு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-10#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04