கார்வண்ணன்

“2022 ஆண்டு, 373.1 பில்லியன் ரூபா பாதுகாப்பு அமைச்சுக்குஒதுக்கப்படவுள்ளது. இது 2021ஆண்டுக்கான ஒதுக்கீட்டை விட, 18பில்லியன் ரூபா அதிகமாகும்”

தற்போதைய அரசாங்கம் அரசியல்ரீதியாக தோல்வியடைகிறதோ இல்லையோ, பொருளாதார ரீதியாக தோல்வியடைந்து விட்டது.

மக்களின் நலன்களை உறுதிப்படுத்தவேண்டிய அரசாங்கம், அந்தக் கடப்பாட்டில் இருந்து விலகி, தனக்கான பொறுப்பைநிறைவேற்றத் தவறியுள்ளது. 

அதற்கு ஆகப் பிந்திய உதாரணமாக,பால்மா, கோதுமை மா, எரிவாயு, மற்றும் சீமெந்து ஆகியவற்றின் மீதான கட்டுப்பாட்டுவிலைகள் தளர்த்தப்பட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.

கிட்டத்தட்ட 3 மாதங்களாக சந்தையில்பால்மாவையே காண முடியவில்லை. விலையை அதிகரிக்க அனுமதிக்காமையினால், இறக்குமதியைகுறைத்து விட்டதாக இறக்குமதியாளர்கள் கூறினார்கள்.

பால்மா விலையை அதிகரிக்க அரசாங்கம்அனுமதிக்காவிட்டால், இறக்குமதியை குறைத்து தட்டுப்பாட்டை ஏற்படுத்துவோம் என்றுஅவர்கள் ஏற்கனவே மிரட்டியிருந்தார்கள்.

அதன்படியே, அவர்கள், செய்தும்காட்டியிருக்கிறார்கள்.

பின்னர், டொலர்களை மத்திய வங்கிவிடுவிக்காததால், கொழும்பு துறைமுகத்தில் பால்மா கொள்கலன்கள் தேங்கியிருக்கின்றனஎன்று தட்டுப்பாட்டுக்கு நியாயம் கூறினார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர்இத்தாலியில் இருந்து நாடு திரும்பியதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, 50 மில்லியன் டொலர்களைவிடுவித்து, துறைமுகத்தில் தேங்கியுள்ள 800இற்கும் அதிகமான கொள்கலன்களைவிடுவிக்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு உத்தரவிட்டார்.

ஆனால், மத்திய வங்கி கடந்தவாரமேடொலர்களை விடுவித்து. கொள்கலன்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தது.

இதுபற்றிய அறிவிப்பை கடந்தவியாழன்று மாலையில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்த பின்னர்,அன்று மாலை 7 மணிக்கு கூடிய அமைச்சரவையில், பால் மா உள்ளிட்ட பொருட்களுக்கானகட்டுப்பாட்டு விலைகளை நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-10#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.