சதீஷ் கிருஷ்ணபிள்ளை  

“ஒருமுன்னாள் பணியாளின் அதிர்ச்சிதரும் வாக்குமூலம்”                         

நாயகன் திரைப்படத்தில்வரும் வசனம் பிரசித்தமானது. பேரன் தாத்தாவிடம் கேட்பார். நீங்க ஏதாவது தப்பு பண்றீங்களா,என்பது முதற்கேள்வி. விடை மௌனம்.

 நீங்க நல்லவரா கெட்டவரா என்பது இரண்டாம் கேள்வி. நீண்டதயக்கத்தின் பின்னர், தெரியலையே என்பார், தாத்தா. தாத்தாவிற்கு பேரனிடம் பாசம் இருக்கும்.பொய் சொல்ல முடியாது. 

இதே காட்சியில்தாத்தாவாக முகநூலையும், பேரனாக உங்களையும் கற்பனை செய்து பாருங்கள். நல்லதையே செய்தேன்,அதனால் நல்லவன் என்றே முகநூல் பதில் அளிக்கும். இங்கு இருப்பது வணிகம். பொய் சொல்லலாம். 

சில வேளைகளில் பொய் மட்டுமே சொல்ல வேண்டும். 

தற்போது உலகை ஆட்டிப்படைக்கும்கம்பனி. இது நல்லது அல்ல என்பதை நிரூபிக்க கடந்த சில நாட்களாக பல குற்றச்சாட்டுக்கள்.அமெரிக்காவின் வோல்-ஸ்ரீட் ஜேர்னல் ஆவணங்களை அடுத்தடுத்து வெளியிட்டது.

 பயனர்கள் அதிர்ந்தார்கள்.இவையெல்லாம் எங்கிருந்து கிடைத்தன என்று அதிசயப்பட்டார்கள். 

புகழ்பெற்ற'60 மினிட்ஸ்”என்ற தொலைக்காட்சியில் கடந்த வாரம் பிரான்ஸஸ் ஹோகன் என்ற பெண்மணி கலந்து கொண்டார்.நானே ஆவணங்களை வழங்கினேன் என்றார்.

 முகநூல் ஏன் கெட்டதாகஇருக்கிறது என்பதைப் பட்டியல் இட்டார். தனது சமூக வலைதளத்தைப் பயன்படுத்துபவர்கள் எக்கேடுகெட்டுப் போனால் என்ன, காசு சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கம் தான் கம்பனிக்கு இருந்ததுஎன்பதை விபரித்தார். 

முகநூலில் வேலை செய்து, விரக்தியால் வெளியேறியவர், பிரான்ஸஸ்.அவர் 37 வயதுடைய பெண்மணி. தரவுகளைக் கையாளும் விஞ்ஞானி.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-10-10#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.