கட்சி பேதமின்றிய தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும் - நிமல் லன்சா

Published By: Gayathri

10 Oct, 2021 | 03:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதாரத்தை  மேம்படுத்த வேண்டுமாயின் கட்சி பேதமின்றிய வகையில் தேசிய கொள்கை வகுக்கப்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக  நாட்டின் சட்டத்திற்கமைய முன்னெடுக்கப்படும் வெளிநாட்டு முதலீடுகளை எதிர்ப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு எதிரான செயற்பாடாக கருதப்படும் என கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்  இராஜாங்க  அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

மீகமுவ பகுதியில் இடம்பெற்ற கட்சி தொகுதி அமைப்பாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் கட்சி பேதங்களை புறக்கணித்து தேசிய கொள்ளை திட்டம் வகுக்கப்பட வேண்டும்.

தவறான நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு நாட்டின் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாது.

சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டை முன்னேற்றும் நோக்குடன் அரச தலைவர்கள் நிலைப்பேறான அபிவிருத்தி யோசனைகளை முன்வைக்கும் போது ஒரு தரப்பினர் எதிர்த்தார்கள். இன்றும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு அரசியல் நோக்கமில்லாமல் ஆதரவு வழங்க வேண்டும்.

தேசிய வளங்களின் உச்ச பயனை பெற முடியாவிட்டால் என்ன செய்வது. அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதற்கு தொழினுட்ப மற்றும் மூலதன வசதி இல்லாவிட்டால் நாட்டின் பொதுசச்ட்டத்திற்கு அமைய வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒன்றினைவது தவறேதுமில்லை. 

கனிய வளத்தின் பயனை 20 வருட காலத்திற்கு பெற முடியாத நிலை காணப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு பயன்தரும் முதலீடுகளை நாட்டுக்கு கொண்டு வரவில்லை. அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டுக்கு பயன்தரும் முதலீடுகளை தற்போது கொண்டு வந்துள்ளோம்.

எமது நாட்டு முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். தொழில் புரிகிறார்கள். ஆனால் வெளிநாட்டவர்கள் இங்கு முதலீடு செய்ய கூடாது, தொழில் புரிய கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அரச நிறுவனங்கள் பல நட்டத்தில் இயங்குகின்றன. இவற்றை நிர்வகிக்க 22 மில்லியன் நிதி செலவிடப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்யாமல் நாட்டுக்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கிறோம்.

உலகில் பல நாடுகள் ஒன்றினைந்து முதலீடுகளை செய்து அபிவிருத்தியடைகின்றன. இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒன்றினைந்து செயற்படும்போது எதிர்ப்பு தெரிவிப்பது தவறானதாகும். 

தேசிய வளங்களை பாதுகாக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு உண்டு. கெரவலபிடிய மின்நிலையத்தின் பங்குகள் ஒப்பந்த அடிப்படையில் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர விற்கப்படவில்லை என்பதை எதிர்தரப்பினர் விளங்கிக்கொள்ள வேண்டும்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்து  வெளிநாட்டு முதலீடுகளை இல்லாதொழிக்கும் முயற்சிகளை அரசாங்கம் கைவிட வேண்டும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை பாதுகாத்து அபிவிருத்தி நிர்மாண பணிகளை அரசாங்கம் சிறந்த முறையில் முன்னெடுத்து செல்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலஸ்தீனர்களுக்கு எதிரான அநீதிகளுக்கு அரசு கண்டனம்...

2025-03-22 15:28:51
news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42