இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள மஹேல ஜெயவர்தன இன்று அபுதாபியில் இலங்கை அணியுடன் இணையவுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார் மஹேல ஜெயவர்ன.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே - ஆப்க்கான வாய்ப்பினை மும்பை அணி தரவிட்டுள்ளதால், எதிர்பார்த்த திகதிக்கு முன்னதாகவே அவர் இலங்கை அணையுடன் இணையவுள்ளார். 

முன்னதாக ஒக்டோபர் 16 முதல் ஒக்டோபர் 23 வரை 7 நாள் காலப்பகுதிக்கு இலங்கை அணியுடன் மஹேல ஜெயவர்த்தனா இருப்பார் என்று இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்சமயம் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மஹேல ஜெயவர்த்தனவின் சேவையைப் பெறுவார்கள்.