தனது மக்கள் சீனாவின் அழுத்தத்திற்கு அடிபணிய மாட்டார்கள் என்று தெரிவித்துள்ள தாய்வானின் ஜனாதிபதி சாய் இங்-வென்,  தீவின் பாதுகாப்பை தொடர்ந்து உறுதிப்படுத்துவதாகவும் அதன் ஜனநாயக வாழ்க்கை முறையை பாதுகாப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், நாம் எவ்வளவு அதிகமாக சாதிக்கிறோமோ, அவ்வளவு பெரிய அழுத்தத்தை நாம் சீனாவில் இருந்து எதிர்கொள்கிறோம் என்றும் சாய் இங்-வென் ஞாயிற்குக்கிழமை தாய்வானின் தேசிய தினத்தைக் குறிக்கும் உரையில் கூறினார்.

சீன போர் விமானங்களின் தாய்வான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் ஊடுருவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, தன்னாட்சி தீவில் 23 மில்லியன் மக்கள் சீனாவின் தொடர்ச்சியான படையெடுப்பு அச்சுறுத்தலின் கீழ் வாழ்கின்றனர்.

சீனா தாய்வானை அதன் பிராந்தியங்களுள் ஒன்றாக கருதுவதுடன், தேவைப்பட்டால் ஒரு நாள் அதை கைப்பற்றுவதாகவும் சபதம் செய்துள்ளது.