Huawei முன்னெடுக்கும் “Dream World” சுற்றுலா

19 Nov, 2015 | 11:03 AM
image

இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நுகர்வோர் மத்தியில் முன்னெடுக்கின்ற ஊக்குவிப்பான “Huawei Dream World 2015” என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை Huawei இன் நுகர்வோர்கள் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசியாவிற்கான அனைத்துச் செலவுகளும் உள்ளடங்கிய வியப்பூட்டும் உலகச் சுற்றுலாவை வெல்லும் வாய்ப்பைக் கொண்டுள்ளனர்.

இந்த பண்டிகைக் காலத்தில் Huawei வர்த்தகநாம ஸ்மார்ட்போன் ஒன்றை கொள்வனவு செய்வதன் மூலமாக தமக்கு விருப்பமான நாட்டிற்குச் செல்லும் சுற்றுலாவிற்கான வாய்ப்பினை வெல்ல முடியும். 

மாபெரும் இறுதி வெற்றியாளர் ஐரோப்பாவிற்கான 10 நாள் சுற்றுலா ஒன்றை வெல்லும் வாய்ப்பைக் கொண்டுள்ளார். மேலும் 10 வெற்றியாளர்கள் டுபாய் நாட்டிற்கான 4 நாள் சுற்றுலாவையும், 25 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் 

பாங்கொங் நகருக்கான 3 நாள் சுற்றுலாவையும் வெல்லும் வாய்ப்பைக் கொண்டுள்ளனர். வாராந்தம் இடம்பெறவுள்ள அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டிழுப்புக்கள் மூலமாக வெற்றியாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்படும். டீ-சேர்ட்டுக்கள், தொப்பிகள், கைப்பட்டிகள், கோப்பைகள் மற்றும் ஏனைய பெறுமதியான வர்த்தகநாமப் பொருட்கள் அடங்கலாக ஏராளமான Huawei  பொருட்களை நாடளாவியரீதியில் இடம்பெறவுள்ள வீதியுலாக்கள் மற்றும் அனுபவ கண்காட்சிகள் மூலமாக Huawei நுகர்வோர் வெல்ல முடியும்.  

Huawei சாதனங்களின் இலங்கைக்கான வதிவிட தலைமை அதிகாரியான ஹென்றி லியு அவர்கள் கூறுகையில், 

“இலங்கையில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு புத்தாக்குனர் என்ற வகையில் Huaweiவர்த்தகநாமத்தின் தரத்தையும், நுட்பத்தையும் அனுபவிக்க முன்வருமாறு அனைத்து இலங்கை மக்களையும் ஊக்குவித்து, இந்த பிரச்சார முன்னெடுப்பை ஆரம்பித்துள்ளதையிட்டு நாம் மிகவும் பூரிப்படைந்துள்ளோம்.

எமது வர்த்தகநாமத்தின் இந்த வருடத்திற்கான குறிக்கோளாக அமைந்துள்ள “கனவுகள் படைப்பாற்றலை ஊக்குவிக்கின்றன” என்பதை உண்மையாக நிலைநாட்டும் வகையில், ஒவ்வொரு குடிமக்களும் பாரிய கனவை கொண்டிருப்பதை இந்த பிரச்சாரம் ஊக்குவிக்கின்றது.

இந்த ஊக்குவிப்பு பிரச்சாரமானது Huawei உற்பத்தியொன்றை அவர்கள் சொந்தமாக கொண்டிருப்பது மட்டுமன்றி, வர்த்தகநாமத்தின் உறுதிமொழியை அவர்கள் கொண்டாடவும் வழிகோலுகின்ற ஒரு மிகச் சிறந்த தளமேடையை வழங்கி, மக்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கும் எனவும் நாம் நம்புகின்றோம்” என்று குறிப்பிட்டார்.   

வாராந்த குலுக்கல் சீட்டிழுப்பு மூலமாக அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவதுடன், மாபெரும் வெற்றியாளர் புதிய ஆண்டின் முதல் வாரத்தில் தெரிவுசெய்யப்படுவார். இலங்கையில் ஸ்மார்ட்போன்களை சந்தைப்படுத்துவதில் முதலிடத்தில் திகழும் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனம், சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள் அடங்கலாக நாட்டிலுள்ள 400 இற்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் 1500 டிஜிட்டல் ஊடக விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள சிங்கரின் டிஜிட்டல் ஊடகம் மூலமாக இந்த உற்பத்திகள் நாட்டில் உள்ள அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right