நாட்டில் இன்று  சனிக்கிழமை 726 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். 

அதற்கமைய இது வரையில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 525,663 ஆக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 479 629 பேர் குணமடைந்துள்ளனர். 32,738 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட 29 மரணங்களுடன் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 13,296 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 18 ஆண்களும் 11 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 23 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர்.