ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில்  உள்ள குந்தூஸ் மாகாணத்தில் மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 100 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

  

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பின்னர் அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.