தலவாகலை - வட்டகொடை - மடகும்புற மத்திய பிரிவு தோட்ட மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

குறித்த தோட்ட பகுதியில் அட்டை, எறுமை மாடு, சிறுத்தை புலி, பன்றி, பாம்பு போன்ற விலங்குகளின் தொல்லை அதிகாித்து காணப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

இதனால் நாளாந்த கொழுந்து பறிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் தோட்ட மக்கள் பெரிதும் சிரமத்தினை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். 

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை எறுமை மாடு மோதியதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர். 

எனவே இதற்கான உரிய தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- எஸ்.சதீஸ்