எம்.எப்.எம்.பஸீர்
ச. தொ.ச. வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பாகவும், பத்திரிகைகளில் வெளியான ஆசிரியர் தலையங்கள் தொடர்பிலும், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துஷான் குணவர்தனவிடம் சி.ஐ.டி. சிறப்புக் குழு நேற்று விஷேட விசாரணைகளை முன்னெடுத்தது.
சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணைகள் இடம்பெற்றதாகவும் இதன்போது விஷேட வாக்கு மூலம் ஒன்றும் பதிவு செய்யப்பட்டதாகவும் சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
நேற்று நண்பகல் 12.00 மணியளவில் சி.ஐ.டி.யின் விசேட விசாரணைப் பிரிவு 2 இல் ஆஜரான துஷான் குணவர்தனவிடம் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் அவர் பிற்பகல் 3.30 மணிளவில் அங்கிருந்து வெளியேறியதாக குறித்த அதிகாரி கூறினார்.
இதன்போது துஷான் குணவர்தனவிடம் இரு சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அமைச்சர் பந்துல குணவர்தனவின் முறைப்பாடு மற்றும் வெள்ளைப் பூண்டு மோசடி ஆகிய இரு விடயங்கள் தொடர்பிலேயே இந்த வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சர் பந்துலவின் முறைப்பாட்டுக்கு அமைய இடம்பெற்ற விசாரணையின் போது, முன்னணி பத்திரிகைகளில் வெளியான ஆசிரியர் தலையங்கங்கள் , செய்திகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்க துஷான் குணவர்தன மறுத்ததாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM