ஒரு கிலோ பால்மாவின் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு : இதோ புதிய விலை ! 

09 Oct, 2021 | 11:23 AM
image

(எம்.மனோசித்ரா)

பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பொருட்களுக்கான நிர்ணய விலை அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கான புதிய விலையை பால்மா இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் பால்மா கிலோ ஒன்றின் விலை 250 ரூபாவாலும் , 400 கிராம் பால்மாவின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இந்த விலை அதிகரிப்புக்களின் பின்னர் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 1195 ரூபாவாகவும் , 400 கிராம் பால்மாவின் விலை 480 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பிற்கு முன்னர் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 945 ரூபாவாகவும் , 400 கிராம் பால்மாவின் விலை 380 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வியாழனன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போது பால்மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட பொருட்களுக்கான நிர்ணய விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. 

குறித்த பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்ட தட்டுப்பாடே இந்த தீர்மானத்திற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய இது தொடர்பிலான இரு வர்த்தமானி அறிவித்தல்கள் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. 

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் கீழ் கூட்டுறவு சேவைகள் , சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தல்களில் , ' பால்மா (முழு ஆடைப்பால்மா, கொழுப்பு நீக்கப்பட்ட பால்மா, குழந்தைகளுக்கான பால்மா) , திரவமாக்கப்பட்ட பெற்றோலியம் எரிவாயு, கோதுமை மா, அனைத்து சீமெந்து வகைகள் ஆகியவை நியமனப்பொருள் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போன்று 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின் 20(5) ஆம் பிரிவின் கீழ் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தவிசாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சாந்த திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் , ' 2019 டிசம்பர் 27 - 2155/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி , 2021 ஜூலை 25 - 2237/40 ஆம் இலக்க வர்த்தமானி , 2016 ஜூலை 14 - 1975/68 ஆம் இலக்க வர்த்தமானி ' என்பவற்றை நீக்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38