குற்றப்புலனாய்வுப் பிரிவில் இன்று ஆஜராகுமாறு வைத்தியர் ஜயருவனுக்கு மீண்டும் அழைப்பு

09 Oct, 2021 | 06:50 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வைத்தியர் ஜயருவன் பண்டாரவை ஆஜராகுமாறு மீள அறிவித்தல் அனுப்பட்டுள்ளது. 

இன்று 9 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு சி.ஐ.டி.யில் ஆஜராக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

ஊடகவியலாளர் சமுதித்த நடத்திய நேர்காணலில், வைத்தியர் ஜயருவன் பண்டார வெளிப்படுத்திய விடயங்களை மையப்படுத்தி,  தவறான தகவல்களை மக்களுக்கு தெரிவித்ததாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக விடயங்களை அறிந்துகொள்வதற்காக வைத்தியர் ஜயருவன் பண்டார  இவ்வாறு மீளவும்  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அந்த விடயம் தொடர்பில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் அண்மையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்வைத்திருந்த முறைப்பாட்டிற்கு அமைய வைத்தியர்  ஜயருவன் பண்டார விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இந் நிலையிலேயே, வைத்தியர் ஜயருவன் பண்டார, கடந்த ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதன் முதலாக சி.ஐ.டி.க்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.  

எனினும் அவர் அப்போது அங்கு ஆஜராகவில்லை. கொவிட் தொற்றிலிருந்து மீண்ட பின்னர், தற்போது வைத்திய ஆலோசனையின் பிரகாரம் கொவிட் நிலைமைக்கு பின்னரான சிற் சில ஆரோக்கியமற்ற நிலைமைகளை கருத்திற்கொண்டு ஓய்வில் உள்ளதாக சட்டத்தரணிகள் சி.ஐ.டி.க்கு அப்போது  சுட்டிக்காட்டியுள்ளனர். 

அதனால் 14 நாட்களின் பின்னர் சி.ஐ.டி. எதிர்ப்பார்க்கும் விசாரணைகள் தொடர்பில் அவர் வாக்கு மூலம் வழங்க தயார் என இதன்போது எழுத்து மூலம்  சட்டத்தரணிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 இவ்வாறான நிலையிலேயே, அவருக்கு இன்று சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஊடகவியலாளர் சமுதித்தவுக்கு வழங்கிய செவ்வியில், வைத்தியர் ஜயருவன் பண்டார, அரசாங்கம் கொவிட் நிலைமையை மையப்படுத்தி எவ்வாறான மாபியாக்களை உருவாக்கியுள்ளது என்பது தொடர்பில் விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார். 

அத்துடன் இந் நிலைமையை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகவும், மக்கள் சுரண்டப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்ததுடன், அதனுடன் தொடர்புடைய பல்வேறு நபர்களின் பெயர்களையும் வெளிப்படுத்தியிருந்தார். 

அதனைவிட, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் மருந்து தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட ' ஈ.என்.எம்.ஆர்.ஏ.' தகவல் கட்டமைப்பு அதிலிருந்த தகவல்கள் காணாமல் போயுள்ளமை தொடர்பிலும் பல விடயங்களை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

 இவ்வாறான நிலையிலேயே அவர் சி.ஐ.டி.க்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

 இதனிடையே, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டமை தொடர்பில் வைத்தியர் ஜயருவன் பண்டாரவுக்கு ஒழுக்காற்று விசாரணைகளை முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை எடுத்திருந்தது.   தாபன விதிக் கோவையை மீறி செயற்பட்டதாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53