(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொழும்பு மாநாகர சபையின் மேயர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையாளருக்கு இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க  பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

எஞ்சியுள்ள 2 பில்லியன் டொலரை மக்களுக்காக பயன்படுத்துங்கள்: ரணில்  அரசாங்கத்திற்கு ஆலோசனை | Virakesari.lk

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) விசேட கூற்றை முன்வைத்தே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

 கொழும்பு மாநகர சபையின் மானியங்களை வழங்குவது தொடர்பாகவே  கொழும்பு மாநகரசபை மேயர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையேயும், ஆணையாளருக்கு இடையேயும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.இந்த பிரச்சினை குறித்து கவனம் செலுத்தியாக வேண்டும், ஆகவே இவர்களை பிரதமர் அழைத்து கலந்துரையாடி தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்  என்றார்.