(எம். எம். சில்வெஸ்டர்)

இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள  உலக இருபத்துக்கு 20 கிரிக்கெட் தொடரில் கடமையாற்றவுள்ள போட்டி மத்தியஸ்தர்கள் மற்றும் போட்டி நடுவர்களின் பெயர்களை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ. சி. சி.) வெளியிட்டுள்ளது.

இதன்படி, இலங்கையைச் சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராகவும் குமார் தர்மசேன போட்டி நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ரஞ்சன் மடுகல்லவைத் தவிரவும் ஜவகல் ஸ்ரீநாத், டேவிட் பூன், ஜெப் க்ரோவ் ஆகியோர் உலக இருபதுக்கு 20 தொடரின் போட்டி மத்தியஸ்தர்கள்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, போட்டி நடுவர்களாக குமார் தர்மசேனவுடன் 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தர்மசேனவைத் தவிர, அலீம் டார், கிறிஸ் பிறவுன், மராய்ஸ் இரஸ்மஸ், கிறிஸ் கபானி, மைக்கல் கோ, ஏட்ரியன் ஹோல்ட் ஸ்ட்ரோக்ஸ், ரிச்சர்ட் இல்லிங்கவர்த், ரிச்சர்ட் கெட்டல்பிரோ, நித்தின் மேனன், ஹசன் ராசா, போல் ரைபல், லங்க்டன்  ரூசர், ரொட் டக்கர், போல் வில்சன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 17 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியம்  மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.